டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடி திட்டம் துவக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 300 கோடி திட்ட திருப்பணிகளை இன்று (செப்டம்பர் 28) சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பணமதிப்பழிப்புக்கு எதிரான மனு விசாரணை!

2016ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் ராகுல்காந்தி

இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு நாளை மீண்டும் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு ராகுல் வருகிறார். அதற்காக தீவிரமான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 130வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாயின.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 502 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார் அறிமுகம்!

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் டொயோட்டாவின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார் இன்று அறிமுகமாகிறது.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து 58 கிராமங்கள் திட்டக் கால்வாய்க்கு இன்று முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி / விநாடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 28) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்தியா தென்னாப்பிரிக்கா முதல் போட்டி!

இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

தடுமாறும் ராகுல்… ஆதரவளித்த இந்திய ஜாம்பவான்!

”அரசிற்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள்” – மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *