டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

காய்ச்சல் சிறப்பு முகாம்!

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 21) 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காலாண்டு தேர்வு தொடக்கம்!
பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 272 ஆண்கள், 226 பெண்கள் என மொத்தம் 498 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 457 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4,995 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்!

பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற வேண்டும் மற்றும் மின்கட்டண சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

தீபாவளி போனஸ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தீபாவளி டிக்கெட் முன்பதிவு!

தமிழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வருபவர்களுக்கான அரசு சிறப்புப் பேருந்து டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.

தரிசன கட்டண டிக்கெட்டுகள் விற்பனை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதம் தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான தரிசனம் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

NC22 படப்பிடிப்பில் வெங்கட்பிரபு
வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நாகசைதன்யா நடிக்க இருக்கும் NC22 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

இந்திய அணி தோல்வி!

மொகாலியில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சனாதனம் : ஆ.ராசாவுக்கு திருப்பதி நாராயணன் பதில்!

மீனவர்களை மீட்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கோரிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.