மகாகவி தினம் கொண்டாட்டம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, “மகாகவி பாரதியாரின் நினைவு தினமான இன்று (செப்டம்பர் 11) மகாகவி நாளாக தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இம்மானுவேல் சேகரன் நினைவுதினம்!
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதுடன் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து ராணி மறைவு – துக்கம் அனுசரிப்பு!
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை முன்னிட்டு இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 113வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாயின.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 247 ஆண்கள், 187 பெண்கள் என மொத்தம் 434 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஒரே நாளில் 381 பேர் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கேரளாவில் ராகுல்காந்தி நடைபயணம்!
இந்திய ஒற்றுமை பயணத்தின் 5வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!
தமிழகத்தில் 36-வது மெகா சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
பிரதமர் மோடி சாதனை புத்தகம் வெளியீடு!
இந்து மக்கள் கட்சி சார்பில், ‘எவரும் எட்ட முடியாத, பிரதமர் நரேந்திர மோடியின் எட்டு ஆண்டு சாதனை புத்தகம்’ வெளியீட்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடக்க உள்ளது.
விநாயகர் சிலை கரைப்பு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று ஏரி, குளங்களில் கரைக்கப்பட உள்ளன. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மாநகரின் சில பகுதிகளில் காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி!
ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் சனாகா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
400 இடங்கள் பெற்றிருந்த காங்கிரசின் நிலை என்ன? பாஜகவுக்கு பயம் காட்டும் மம்தா