டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கேரளாவில் ராகுல் காந்தி!
தமிழகத்தை தொடர்ந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் (பாரத் ஜோடோ யாத்ரா) 4வது நாளான இன்று (செப்டம்பர் 10) கேரளாவில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.
பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது
டின்பிஎஸ்சி குரூப் 7பி, 8 தேர்வு!
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள குரூப் 7பி, 8 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 112வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 436 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நவம்பர் 19ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
எலிசபெத் மறைவு – மன்னர் அறிவிப்பு!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி பதவி ஏற்கிறார்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்!
இம்மானுவேல் சேகரனின் நினைவுதினத்தையொட்டி பரமக்குடி அருகே உள்ள அவருடைய நினைவிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி காவிரி பாலம் மூடல்!
திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் மூடப்படுகிறது.
5 நாட்களுக்கு மழை!
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.