டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும்!

தசரா விழா விடுமுறை நிறைவடைந்ததையொட்டி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இன்று (அக்டோபர் 6) முதல் செயல்படும். அதேவேளையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே 9ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை விடுமுறைக்கு சென்றோர் சென்னை திரும்ப வசதியாக, பல்வேறு ஊர்களில் இருந்து இன்று, 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி!

இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே அடுத்ததாக 3ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற உள்ளது. லக்னோவில் இன்று நடைபெறும் அதன் முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 138வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,85,006 ஆக அதிகரித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

உபா சட்டத்தையும், என்.ஐ.ஏ. அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் கவர்னரை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

பா.ஜனதா செயற்குழு கூட்டம்!

கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் பெங்களுருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடக்கிறது.

எரிசக்தி பேச்சுவார்த்தை!

இந்தியா அமெரிக்க இடையிலான எரிசக்தி பேச்சுவார்த்தை பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் வாஷிங்டனில் இன்று நடைபெறுகிறது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

42 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டுத் திடல்கள்: சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு!

முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *