டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று (நவம்பர் 17) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ரயில்கள் தாமதம்!

திருப்பூர் அருகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு சிறப்பு பேருந்து!

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல் 20ம்தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்க உத்தரவு!

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்றுமுதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்!

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது.

தொழில்நுட்ப உச்சி மாநாடு!

பெங்களூருவில் இன்று நடைபெறும் 25வது தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல்!

டி20 உலகக்கோப்பையை வென்றதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடிலெய்டில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 180வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆண்கள், 31 பெண்கள் உள்பட மொத்தம் 65 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூட்டணியில் தினகரனுக்கு நோ: எடப்பாடி பேச்சின்  ‘தங்க’ ரகசியம்! 

இனி இந்த இயக்கம்தான்…  வைரமுத்துவின்  புது ரூட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *