டிஜிட்டல் நாணயம் அறிமுகம்!
நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் இன்று(நவம்பர் 01) டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
ஹெல்மெட் அணிவது கட்டாயம்!
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இன்று முதல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அரசு எச்சரித்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதம் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும்.
மோர்பி செல்கிறார் மோடி
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் நேற்று முன் தினம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று மோர்பிக்கு செல்கிறார்.
புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகள், இன்று முதல் நவம்பர் 11 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2106 தெருக்களில் தூர்வாரும் பணி!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் உள்ள 2106 தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களில் இன்று முதல் தூர்வாரும் பணி நடைபெறுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
நகர சபை கூட்டம்!
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களை போல நகர சபை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை நடைபெறுகிறது. சென்னை பம்மலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தெலுங்கானாவில் ராகுல்காந்தி!
இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி இன்று தனது பயணத்தை தெலங்கானா மாநிலம் சாம்ஷாபாத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று 164வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.
சூப்பர் 12 சுற்று போட்டிகள்!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளும், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
கொட்டும் மழை : எங்கெங்கு விடுமுறை?
சீனாவின் ஐ போன் தொழிற்சாலையில் இருந்து வேலி தாண்டி ஓடும் தொழிலாளர்கள்!