டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
முதல் அரையிறுதி போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (நவம்பர் 09) சிட்னியில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
மூன்று மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
இரண்டு நாள் பயணமாக, மூன்று மாவட்டங்களுக்கு செல்ல உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார்.
புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு!
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!
வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 172வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
ஆர்.டி.ஐ வருடாந்திர மாநாடு!
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா “விடுதலையின் அமிர்த பெருவிழா ஆர்.டி.ஐ மூலம் குடிமக்கள் மையப்படுத்திய ஆட்சி” என்ற தலைப்பில் மத்திய தகவல் ஆணையத்தின் வருடாந்திர மாநாட்டை இன்று டெல்லி விஞ்ஞான பவனில் தொடங்கி வைக்கிறார்.
மீண்டும் பள்ளிகள் திறப்பு!
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இலங்கை வீரர் மேல்முறையீடு!
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தரப்பில் இன்று அந்நாட்டின் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு!
காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி நாளை வருகை தரும் நிலையில், காந்திகிராமத்தில் இன்று சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மூடப்படும் 1,800 சுகாதார மையங்கள்: காரணம் என்ன?
கார்த்தி படத்தில் ஜோக்கர் கூட்டணி!