முதலமைச்சர் மதுரை பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) மதுரை மாநகராட்சியில் தூய்மையாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
குளிர்காலத் கூட்டத்தொடர்
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் கூடவுள்ளது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் மற்றும் அதி கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை அப்டேட்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று 202வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சினிமா அப்டேட்
இன்று வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவா நடிப்பில் வரலாறு முக்கியம், குருமூர்த்தி, எஸ்டேட் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
பாபா ரீரிலிஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப 20 ஆண்டுகள் கழித்து ரீரிலிஸ் ஆக உள்ளது.
ஃபிஃபா கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறவுள்ள காலியிறுதி சுற்றில் பிரேசில் – குரோஷிய அணிகள் மோதவுள்ளன.
‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு
இமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ்