டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

செஸ் ஒலிம்பியாட் : தொடரும் இந்தியாவின் வெற்றி!

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் 2ஆவது சுற்று நேற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி, பிரக்ஞானந்தா மற்றும் நந்திதா வெற்றி பெற்றுள்ளார். இன்று (ஜூலை 31) 3ஆவது சுற்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

தமிழக காவல்துறைக்கு புதிய லோகா!

தமிழக காவல் துறையில் காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே விதமான அடையாள ‘லோகோ’ இன்று முதல் இடம்பெற உள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று காலை நடைபெறும் இதற்கான அறிமுக விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார்.

வருமான வரித்தாக்கல் – இன்று கடைசிநாள்!

வரிமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. இன்று தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 71ஆவது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,42,779 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,964 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் இதுவரை மொத்தம் 34,91,653 பேர் குணமடைந்துள்ளனர்.

டிவிட்டருக்கு எதிராக எலோன் மஸ்க் வழக்கு!

உலக பணக்காரர் எலோன் மஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 17ம்தேதி முதல் விசாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக எலோன் மஸ்க் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்

30 நிமிடத்தில் ஒரு லட்சம் கார் புக்கிங்!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய ஸ்கார்பியோ என் காரின் முன்பதிவை நேற்று தொடங்கியது. தொடங்கிய 30 நிமிடங்களிலேயே 1 லட்சம் முன்பதிவு நடைபெற்று சாதனை படைத்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான டெலிவரி செப்டம்பர் 26 முதல் தொடங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்கள் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளியும், குருராஜா வெண்கலமும், மீராபாய் சானு தங்கமும், பிந்த்யாராணி தேவி வெள்ளியும் வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் நேற்று பெய்த கனமழையால் பலபகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.