செஸ் ஒலிம்பியாட் : இந்தியா அபாரம்!
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாவது சுற்று இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.
நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் மற்ற்றும் மகளிர் அணி பிரிவில் இந்திய அணி பல்வேறு நாடுகளை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது.
கேரளா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
கேரளா, திருச்சூரில், மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்லேவ் 2022 நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தனது அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டில் போதைக்கு வைக்கப்படும் தீ!
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இன்று நடைபெறும் போதை பொருள் தடுப்பு தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொள்ள உள்ளார்.
அவரது முன்னிலையில் நாட்டின் 4 பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கிலோ போதை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 70வது நாளாக இன்று விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 969 ஆண்கள், 655 பெண்கள் என மொத்தம் 1,624 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 353 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் 2,004 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,89,689 ஆக உள்ளது.
போதை பொருட்கள் ஒழிக்க கோரி பாமக போராட்டம்!
போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை கோரி பாமக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார்.
வருமான வரி தாக்கல் : மத்திய அரசு எச்சரிக்கை!
2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ஐ டி ஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் வரியை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் வரியை செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
புதிய ஸ்கார்பியோ – முன்பதிவு தொடக்கம்!
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனத்தில் எஸ் யூவி ரக ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் முன்பதிவு மஹிந்திரா நிறுவனத்தின் டிஜிட்டல் பிளேட்போர்மில் இன்று காலை 11 மணியளவில் தொடங்குகிறது.
காமன்வெல்த் 2022 : இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது. முதல் போட்டியில் வெற்றியுடன் துவங்கியுள்ள இந்திய மகளிர் அணி இன்று வேல்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்திய அணி முன்னிலை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 – இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
190 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.