டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்று ஆட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் ஆட்டம் இரவு 9 மணி வரை நடைபெறும். தினமும் ஒரு சுற்று நடைபெற உள்ள நிலையில் ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

கறுப்பு நிற காய்களுடன் களத்தில் மோதும் இந்தியா!

நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமர் மோடி தேர்வு செய்தார். அதன்படி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய மகளிர் ஏ அணி தனது முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் இன்று விளையாட உள்ளது.

விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களும் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 69வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,712 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,39,607 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,106 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் இதுவரை 34,87,685 பேர் குணமடைந்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி

2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்தார். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

ஓபிஎஸ் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை : கால அவகாசம் நிறைவு!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அமீரகத்தில் ஆசிய கோப்பை!

இலங்கையில் அடுத்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் நிலவுவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

சந்தானத்தின் குலு குலு இன்று ரிலீஸ்!

மேயாத மான், ஆடை ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் ’குலு குலு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *