டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க….

அரசியல்

மின்கட்டண உயர்வு : எடப்பாடி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18ஆம் தேதி அறிவித்தார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சென்னையில் இன்று (ஜூலை 27) எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. சி.பி.எஸ்.சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் விண்ணப்பத் தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

சோனியாகாந்தி 3வது நாளாக இன்று ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பாக ஏற்கனவே 2 நாட்கள் ஆஜரான நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3வது நாளாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 67வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,830 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூலை 25ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 1,903ஆக குறைந்த நிலையில், நேற்று 1,846ஆக குறைந்துள்ளது.

கனியமூர் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்ட நிலையில், இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவிப்பு.

5ஜி ஸ்பெக்ட்ரம் – இன்று 5வது சுற்று!

5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 5வது சுற்று ஏலம் நடைபெறுகிறது. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் ஜியோ, ஏர்டெல், வேடோஃபோன் – ஐடியா நிறுவனங்களுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் – வெளிநாட்டு வீரர்கள் வருகை!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் வருகை அதிகரித்துள்ளது. நள்ளிரவில் மட்டும் சவுதி அரேபியா, ஈரான், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 321 வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் இந்தியா?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றிய நிலையில், ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் வெற்றி பெற இந்தியா போராடும்.

வாத்தி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட உள்ளது. படத்தின் டீசர் வருகிற நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *