பாலமேடு ஜல்லிக்கட்டு!
நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்த்துறை விருதுகள்!
தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ்த்துறை விருதுகளை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
புத்தகத் திருவிழா!
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெற்று வரும் நிலையில் இன்று பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
நேபாள விமான விபத்து!
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடரும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை!
உள்நாட்டில் வாக்காளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக இன்று (ஜனவரி 16) அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கவுள்ளது.
எடப்பாடி பழனிசாமி -சமத்துவ பொங்கல்!
தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் இன்று சேலம் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெறுகிறது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இறைச்சிக் கடைகள் மூடல்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று இறைச்சிக் கடைகளை மூட அந்தந்த மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் காங்கிரஸ் மாநாடு!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் பெங்களூரில் இன்று மகளிர் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!ம
240வது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
ஜோஷிமத் ஆபத்து – இன்று விசாரணை!
ஜோஷிமத் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு
கடிக்கவந்த நாய்; பயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த உணவு டெலிவரி இளைஞர் பலி!