போகியை வரவேற்ற மக்கள்!
தைத்திருநாளை வரவேற்கும் விதமாக இன்று (ஜனவரி 14) போகி பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை சங்கமம்
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சபரிமலை மகரபூஜை
சபரிமலையில் இன்று மகரபூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
பொங்கல் விழா
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று தொடங்கி இரு நாட்கள் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை வீரர்கள் பேரணி
டேராடூனில் உள்ள ஜஸ்வந்த் ராணுவ மைதானத்தில் இன்று 7-வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினப் பேரணி நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று 238ஆவது நாளாக பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி பெண்கள் 6 பேர், ஆண்கள் 4 பேர் என மொத்தம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, நாமக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இமாச்சலில் நிலநடுக்கம்
இமாச்சல பிரதேச மாநிலம் தர்மஸ்தலாவில் இன்று அதிகாலை 5.17 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்
தென்ஆப்பிரிக்காவில் பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.