டாப் 10 நியூஸ் : தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் INDvsENG அரையிறுதி வரை!

Published On:

| By christopher

top 10 news today jan 31

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) தொடங்குகிறது. top 10 news today jan 31

அமித் ஷா சென்னை வருகை! top 10 news today jan 31

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மகள் வழி பேரன் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர்.

உள்துறை செயலர் ஆஜராக உத்தரவு!

வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு மழை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது.

செமி பைனலில் தமிழ்நாடு

ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பைனலுக்கு செல்வார்களா இந்தியா மகளிர்?

19வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் கோலாலம்பூரில் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

விராட் கோலி பேட்டிங்!

டெல்லி கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் ரஞ்சி போட்டியில் ரயில்வே அணியை எதிர்கொண்டு ஜாம்பவான் விராட்கோலி பேட்டிங் செய்ய உள்ளார்.

ப்ரோமான்ஸ் டிரெய்லர் ரிலீஸ்!

அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்துள்ள ப்ரோமான்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது

கிங்ஸ்டன் பட பாடல் ரிலீஸ்!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தின் ராசா ராசா பாடல் இன்று வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share