டாப் 10 நியூஸ் : 7ஆம் கட்ட தேர்தல் முதல் மோடி தியானம் வரை!

அரசியல்

7ம் கட்ட மக்களவைத் தேர்தல்!

2024 மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (01.06.2024) நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், இந்தியா கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் டி.ஆர் பாலு எம்.பி. கலந்து கொள்ளவுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மூன்றாவது நாளாக மோடி தியானம்!

மக்களவைத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று மூன்றாவது நாளாக தியானத்தை தொடர்கிறார். 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை குமரியில் இருந்து புறப்படுகிறார்.

மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் – புதிய விதி அமல்!

18 வயது நிரம்பாத சிறுவர்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன.

திமுக முகவர்கள் கூட்டம்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திமுக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு!

மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6:00 மணிக்கு மேல் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி  இன்று  தொடங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த போட்டிகளில் 20 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரோஹித் ஷர்மா தலைமையின் கீழ் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியன் 2 ஆடியோ லான்ச்!

உலக நாயகன் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ லான்ச்  இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடை பெறுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை!

சென்னையில் தொடர்ந்து 77வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : இறால் மோமோஸ்!

Singapore Open 2024: அதிரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய த்ரீஷா – காயத்ரி இணை

கடன் வாங்க கடன்… பல்லடத்தில் பலியான அசாம் பிஞ்சு!

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *