திமுக ஆர்ப்பாட்டம்! Top 10 News Today in Tamil July 27 2024
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ( ஜூலை 27) திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
நிதி ஆயோக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த சிறப்பு திட்டமும் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்திருக்கும் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , இந்த கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என்று கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி!
2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் கோலாகலமாக நேற்று இரவு தொடங்கியது. இதில் இன்று, பேட்மின்டன், துப்பாக்கி சுடுதல், ரோவிங், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்து சண்டை, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
கனமழை!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியும் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்கிறார்.
முதுகலை மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
கோவையில் கார் பந்தயப் போட்டி!
கோவையில் ப்ளூ பேண்ட் எஃப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய ரேலி சாம்பியன்ஷிப் காா் பந்தயத்தின் 3-ஆவது சுற்று இன்று தொடங்குகிறது. முதல் இரண்டு சுற்றுகள் சென்னையிலும், நாசிக்கிலும் நடைபெற்ற நிலையில் கோவையில் மூன்றாவது சுற்று நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 132வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேட்டூர் அணை!Top 10 News Today in Tamil July 27 2024
காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை இன்று 100 அடியை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காஷ்மீரி சாகு!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா? நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!
இது தெரியாமப் போச்சே: அப்டேட் குமாரு