அனைத்துக் கட்சி கூட்டம்!
காவிரி நதிநீர் பங்கீடு ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (ஜூலை 16) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
கன மழை!
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அன்னியூர் சிவா பதவி ஏற்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எல்.எல்.ஏவாக பதவி ஏற்கிறார்.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் நீதிபதி பூர்ணிமா வழக்கை ஒத்தி வைத்தார்.
மின் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பகுதிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். நீலகிரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் ட்ரெய்லர்
நடிகர் தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே எழுதி, இயக்கியிருக்கும் நிலையில் அதன் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 121-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
36ஆவது ஆண்டில் பாமக!
இன்று ஜூலை 16ஆம் தேதி பாமக 35 ஆண்டுகளை நிறைவு செய்து, 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு
அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
9 நாட்களுக்கு அந்யோதயா விரைவு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி!
‘சண்டாளர்’ சாதி பெயரை பயன்படுத்த கூடாது : பழங்குடியின ஆணையம்!