பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வழக்கமான விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை!
தேனி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க விழா!
இன்று மதியம் 3 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் 53-ஆம் ஆண்டு அதிமுக தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழா!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (அக்டோபர் 26) நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கவுள்ளார்.
நட்சத்திரங்களின் பிறந்தநாள்!
நடிகைகள் அசின், அமலா பால், மேகா ஆகாஷ், பாடகர் மனோ உள்ளிட்டோர் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 223வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும் டீசல் ரூ. 92.34க்கும் விற்பனையாகிறது.
கூடுதல் பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தவெக மாநாடு – இறுதிக் கட்ட பணிகள்!
தவெக மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், விக்கிரவாண்டியில் உள்ள வி .சாலை இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்.இ.டி.திரை மற்றும் இருக்கைகள் போடுதல், பார்க்கிங் வசதி ஆகிய பணிகள் நடந்து வருகின்றன
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இன்று காலை இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!
15 நிமிடத்தில் 4.5 செமீ… மதுரையைப் புரட்டி போட்ட கனமழை!