மிக முக்கிய மசோதா தாக்கல்? top 10 news today February 10 2024
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (பிப்ரவரி 10) முடிவடைய உள்ள நிலையில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக பாஜக கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திமுக
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு முன்னிலையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அக்கட்சியின் சார்பாக கருத்துகளை முன்வைக்கிறார்.
மைசூரு வருகிறார் அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மைசூரு வருகிறார்.
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!
சென்னை செம்மொழி பூங்காவில் இன்று தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மக்களை சந்திக்கும் பாஜக!
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை குழு இன்று முதல் மக்களை சந்தித்து கருத்து கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போராட்ட ஆயத்த மாநாடு!
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு போராட்ட ஆயத்த மாநாடு நடத்துகிறது.
மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க இன்று மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நலன் குமாரசாமி பிறந்தநாள்!
சூது கவ்வும், காதலும் கடந்துபோகும் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரம்மயுகம் ட்ரைலர் ரிலீஸ்!
மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் திரைப்படத்தின் ட்ரைலர் அபுதாபியில் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 630வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடோடி சசிகுமாரை நினைவூட்டும் ஃபிரீடம் ஆகஸ்ட் 14!
பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: இம்ரான்கான் ஆதரவாளர்கள் முன்னிலை!
top 10 news today February 10 2024