காலநிலை மாற்ற உச்சி மாநாடு!
சென்னையில் 3-வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 4) தொடங்கி வைக்கிறார். top 10 news today feb 4
மதுரையில் இந்து முன்னணி போராட்டம்! top 10 news today feb 4
மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது. இதில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை கலெக்டர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவாதம்!
தெலங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அறிக்கை மீது அந்த மாநில பேரவையில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தல் ஏற்பாடு தீவிரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திர தினம்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று அந்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மின்சார இன்ஜின் மூலம் மதுரை – போடி ரயில்!
சென்னை சென்ட்ரல் – போடி (20601), மதுரை – போடி பாசஞ்சர் (56701) ஆகிய ரயில்கள் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தைப்பூச திருவிழா ஆரம்பம்!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா விநாயகர் பூஜையுடன் இன்று தொடங்கி, தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
53 பள்ளிகளுக்கு விடுமுறை!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை உயர்வு!
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 20ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.100.90க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது.