டாப் 10 நியூஸ் : வேங்கைவயல் வழக்கில் தீர்ப்பு முதல் ஈரோடு கிழக்கு பிரச்சாரம் நிறைவு வரை!

Published On:

| By christopher

top 10 news today feb 3

வேங்கைவயல் வழக்கில் தீர்ப்பு! top 10 news today feb 3

வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 3) தீர்ப்பு வழங்குகிறது. top 10 news today feb 3

அண்ணா நினைவு தினம் – அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு பிரச்சாரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை முன்னிட்டு வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

டெல்லியில் பிரச்சாரம் ஓய்கிறது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

மகாகும்பமேளா பலி – உச்சநீதிமன்றம் விசாரணை!

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மதுரையில் 2 நாட்கள் ஊரடங்கு உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப்ரவரி 4) இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மதுரையில், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்பாறு அணையில் தண்ணீர் திறப்பு!

உப்பாறு அணையிலிருந்து பிப்ரவரி 3 முதல் 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடக்கம்!

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்போட்டிகள் வரும் 9ம் தேதி வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைறெ உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel