திருச்சியில் ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு விழா இன்று (பிப்ரவரி 2) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா! top 10 news today feb 2
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதையொட்டி, தவெக கொள்கை தலைவர்களின் சிலைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்திரப்பதிவுக்கு அனுமதி!
பத்திரப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இறுதிக்கட்ட பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவுபெற உள்ள நிலையில், திமுக – நாதக இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திருவந்திபுரம் கோவில் குடமுழுக்கு!
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடக்கிறது.
மும்பையில் இந்தியா வெல்லுமா?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இறுதிப்போட்டியில் இந்தியா!
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதுகின்றன. கோலாலம்பூரில் பகல் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.81க்கும் விற்பனையாகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மும்பை ஓபன் டென்னிஸ் தொடக்கம்!
டபிள்யூடி மும்பை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியின் 5வது தொடர் மும்பையின் கிரிக்கெட் கிளப் வளாகத்தில் இன்று தொடங்குகிறது. top 10 news today feb 2