மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (பிப்ரவரி 18) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அணியிலுள்ள கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. top 10 news today feb 18
மதுரை நியோ டைடல் பார்க் அடிக்கல்! top 10 news today feb 18
மதுரை நியோ டைடல் பார்க் கட்டுமான பணியை துவக்கி வைத்து, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மோடி – கத்தார் அதிபர் சந்திப்பு!
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானி, இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சவுதி அரேபியாவில் இன்று நடைபெறுகிறது.
புதிய தேர்தல் ஆணையர் நியமனம்!
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பட்ஜெட் – கருத்துக்கேட்பு கூட்டம்!
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைகள், அது சார்ந்த அமைப்புகளுடன் இன்று முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
சிம்பு குரலில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ’டீசல்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடியுள்ள பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதல்
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 5வது லீக் மேட்ச் இன்றிரவு 7.30 மணிக்கு வதோதராவில் உள்ள கோடம்பி ஸ்டேடியத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி இடையே நடைபெறவுள்ளது.
பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடக்கம்!
23-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.