அமைச்சராகிறார் உதயநிதி
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு!
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இணைப்பு பேருந்து!
இன்று முதல் ஆலந்தூர் மெட்ரோ – குருநானக் கல்லூரி வரை 2 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் அப்டேட்!
இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
வானிலை நிலவரம்!
இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேசிய எரிசக்தி தினம் கொண்டாட்டம்!
இன்று டிசம்பர் 14ஆம் தேதி தேசிய எரிசக்தி தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற குளிர்கால தொடரின் ஆறாவது அமர்வு இன்று நடைபெறுகிறது.
ராகுல் நடைப்பயணம்!
ராகுல் காந்தி இன்று 98 வது நாளாக ஒற்றுமை நடைபயணத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் பதோட்டியில் தொடங்கியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 206-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி!
கிச்சன் கீர்த்தனா: தக்காளி குழிப்பணியாரம்