அமைச்சர் இல்ல திருமண விழாவில் முதல்வர்!
தென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (செப்டம்பர் 9) காலை மதுரை பாண்டிக்கோவில் அருகே நடைபெறவுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளார். அதனைதொடர்ந்து காலை 11.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
3வது நாளில் இந்திய ஒற்றுமை பயணம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று 3வது நாளாக தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இருந்து தொடங்குகிறார்.
ஆன்லைன் ரம்மி வழக்கு விசாரணை!
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 111வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,924 ஆக உள்ளது.
திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி தேதியாகும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றிப் பெறும் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்!
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இன்று பொறியியல் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் நவம்பர் 13ம் தேதி முடிவடைகிறது. நவ 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
10 மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1020 நாட்களுக்கு பிறகு விராட் கோலி சதம்!
ஆசிய கோப்பையில் நேற்று ஆப்கானிஸ்தானை சூப்பர் 4 சுற்றில் எதிர்கொண்ட இந்திய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 1020 நாட்களுக்கு பிறகு 71-வது சதத்தை அடித்தார் விராட்கோலி.
சூர்யா 42 மோஷன் போஸ்டர் வெளியீடு!
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள்ளது.
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய அபூர்வ சந்திப்பு: நெல்லை ஃபார்முலா தொடருமா?