கனமழை எச்சரிக்கை – விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று (04.08.2022) மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். கோவையில் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை!
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று முதல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் – ஒருநாள் விடுமுறை!
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் 6 மணி நேரம் விளையாடி வரும் வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக இன்று ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 5ஆம் (நாளை) தேதி துவங்கும் போட்டி 10ஆம் தேதி வரை நடக்கும் என போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 75வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,48,195 ஆக அதிகரித்துள்ளது. 1,691 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 61 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!
கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை!
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை, மேட்டுர் ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்தவிடப்பட்டுள்ளன. கொள்ளிடம், வைகை, காவிரி ஆற்றின் கரையோரம் இருக்க கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் அப்டேட்!
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று பளுதூக்குதல் 109 கிலோ பிரிவில் லவ்பிரீத் சிங், 109+ பிரிவில் குர்தீப் சிங், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோசல் மற்றும் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தேஜாஸ்வின் சங்கர் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7ம் இடத்தில் உள்ளது.
முதல் தோல்வியை சந்தித்த இந்திய பி டீம்!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இந்திய பி அணியானது அர்மேனியாவிடம் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய சி அணி, 3-0.5 என்ற புள்ளி கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ மற்றும் சி அணிகள் 3-1 என்ற புள்ளி கணக்கில் முறையே ஜார்ஜியா மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தின. இந்திய பி அணி, செக். குடியரசுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்றகணக்கில் டிரா செய்தது.
எண்ணித்துணிக திரைப்படம் ரிலீஸ்!
அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ள ‘எண்ணித்துணிக’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை : பி.டி. உஷா எம்.பி!