பிரிக்ஸ் மாநாடு – பிரதமர் பயணம்!
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் 15-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 22) காலையில் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
சென்னையின் 384வது பிறந்தநாள்!
தமிழ்நாட்டின் தலைநகரமும், பழம்பெருமை வாய்ந்த நகரமுமான சென்னை மாநகரம் இன்று தனது 384வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
அண்ணாமலை நடைபயணம் நிறைவு!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் நெல்லையில் இன்றுடன் முடிவடைகிறது.
இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வரும் 10-வது உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா இன்று மோதுகிறார்.
11 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் கவர்னர் நினைவு தினம்!
இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆன்லைனில் பதிவு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்விற்காக ஆன்லைனில் இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று 458-வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சந்திரமுகி 2: இரண்டாவது சிங்கிள்!
நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகவுள்ளது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தல் வேட்புமனு தாக்கல்!
சிங்கப்பூரின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றிருக்கும் மூவர் இன்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?
கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் இட்லி