3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை தவிர்க்க புது ஐடியா!
பேக்கிங் செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியைத் தவிர்க்க, 26 கிலோ பேக்கிங் செய்து, திருப்பூர், காங்கேயம் அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
4வது சுற்றில் தடுமாறிய இந்திய அணி!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5வது சுற்று இன்று மதியம் தொடங்குகிறது. நேற்று நடந்த 4ஆவது சுற்றில் இந்தியாவின் 3 அணிகள் வெற்றி பெற்ற நிலையில் 2 அணிகள் தோல்வி அடைந்தன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 73வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102. 63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 1,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,95,345 ஆக உள்ளது.
மோடியை சந்திக்கிறார் மாலத்தீவு அதிபர்!
அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் நேற்று இந்தியா வந்தார். இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
அல்கொய்தா தலைவர் கொலை – ஜோ பைடன் உறுதி!
ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதிபடுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
அறிவு, சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து தீ….
‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் குறித்து பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து ரோலிங் ஸ்டோன் அட்டைப்படம் டு செஸ் ஒலிம்பியாட் வரையான சர்ச்சைகள் குறித்து பாடகி தீ தனது சார்பில் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கண் தானம் செய்த என்.டி.ஆரின் மகள்!
மறைந்த தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர், நடிகர், ஆந்திர முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் உமாவின் கண்களை தானம் செய்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்: மூன்று இந்திய வீரர்கள் டிரா!