வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்!
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை தேசியக்கொடி ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொந்த ஊருக்கு வரும் ராணுவ வீரர் உடல்!
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரைக்கு முற்பகல் 11:50 மணிக்கு கொண்டுவரப்படுகிறது. பின்பு சொந்த ஊரான தும்மகுண்டு புதுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின்பு லட்சுமணன் உடல் அருகேயுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
காற்றாடி திருவிழா
செஸ் ஒலிம்பியாட்டை தொடந்து மாமல்லபுரத்தில் இன்று முதல் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்குகிறது. இதனை சுற்றுலாத் துறைஅமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்க உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 84வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,140 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,11,249 ஆக உள்ளது.
காமன்வெல்த் வீரர்களை சந்திக்கிறார் பிரதமர்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார்.
ரேசன் கார்டு குறைதீர் முகாம்!
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
லோக் அதாலத் இன்று கூடுகிறது!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்), அனைத்து நீதிமன்றங்களிலும் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சமரச முறையில் தீர்வு காண இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லும் மீனவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். கடந்த 3-ந் தேதி முதல் வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வள துறையால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 10 நாட்கள் நீடித்த நிலையில் இயல்பு நிலை திரும்பியதால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க உள்ளனர்.
ஆசிய கோப்பை : வங்க தேச அணி இன்று அறிவிப்பு!
ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இம்மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் மட்டுமே தங்கள் அணிகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்க தேச அணியின் முன்னணி வீரரான ஷாகிப் அல் ஹசன் , ‘பெட் வின்னர்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு : ரூ.1,38,500 ஊதியத்தில் பணி… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!