கர்நாடகா – வேட்பு மனு தாக்கல்!
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 13) தொடங்குகிறது.
71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!
வருவாய், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் தேர்வான 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணை வழங்குகிறார்.
அமித்ஷா ஆலோசனை!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.66க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனையாகிறது. 327ஆவது நாளாக விலையில் மாற்றம் இல்லை.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சுற்றுச்சூழல், வனம் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஐபிஎல் போட்டி!
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகின்றன.
இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தை!
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடக்கம் குறித்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிக்கிறார்.
நெட் தேர்வு முடிவுகள்!
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று இயல்பை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான வெப்ப நிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.