ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
அமுதா ஐஏஎஸ் விசாரணை!
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக இன்று அமுதா ஐஏஎஸ் விசாரணையை தொடங்க உள்ளார்.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்!
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
சீனாவுக்கு எதிராக புதிய திட்டம்!
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் ‘Vibrant Villages Program’ திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
பிளஸ் டூ விடைத்தாள் திருத்தம்!
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
கொரோனா தடுப்பு ஒத்திகை!
மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனோ தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.
எல்.ஜி.எம் ஃபர்ஸ்ட் லுக்!
தோனி தயாரிக்கும் முதல் படமான எல்.ஜி.எம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது!
உச்ச நீதிமன்றம் விசாரணை!
சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை வகுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 324வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பரவல் நிலவரம்!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் ஒரே நாளில் 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி!
தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் அப்டேட்!