டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

கோவையில் முதல்வர் ஸ்டாலின்

3 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூரில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு ஈச்சனாரி பகுதியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

தொடர்ந்து சூலூர் பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்புக்கான பணிகளையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சூலூர் வாரச்சந்தை வளாகத்தை மேப்படுத்தும் திட்ட பணிகளையும் இன்று துவக்கிவைக்கஉள்ளார். மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் திருப்பூருக்கு செல்கிறார்.

11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்றுபிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் தேர்வு மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செருப்பு தொழிற்சாலையில் ரெய்டு!

நேற்று காலை முதல் இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான ஃபரிதா குழுமத்துக்கு தொடர்புடைய 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. ஃபரிதா குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து இந்த குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 95-வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 591-ஐ விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,64,473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீமதி மரணம் – ஆய்வறிக்கை ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு மாணவியின் பெற்றோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஆய்வறிக்கை இன்று வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

புற்றுநோய் மருத்துவமனை – நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

புதிய சண்டிகர் முல்லன்பூரில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை மத்திய அரசால் 660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் மருத்துவமனையானது 300 படுக்கைகள் கொண்ட ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையாகும்.

இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து அந்நாட்டை விட்டு தப்பி ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இன்று கொழும்பு திரும்புகிறார். இதனால் இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படப்பிடிப்பு – மீண்டும் துவக்கம்

ஷங்கர் – கமல் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் இரவு 12:01 மணிக்கு அறிவித்துள்ளது.

அதிரடியாக விலையை குறைத்த சாம்சங் நிறுவனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.