டாப் 10 நியூஸ்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

வெண்கலத்தை வென்ற இந்தியா!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. இப்போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், அர்மேனியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப் பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.

மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுத்துவிட்டு, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் வழங்கினார். அதன்படி, பாட்னாவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்கின்றனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை!

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 81வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,911 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,438 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,07,667 ஆக உள்ளது.

ஒரே இடத்தில் சந்திப்பார்களா அதிமுக தலைவர்கள்?

அதிமுகவின் முதல் எம்.பியான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், இன்று பகலில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகியோர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு விசாரணை!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கு தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் 72 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 174 பேரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

குஜராத்தில் அரசியல் கூடு கட்டும் கெஜ்ரிவால்

டெல்லி, பஞ்சாபைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று குஜாராத் பலபூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தனிநபர் பிரிவில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். மொத்தம் விளையாடிய 11 சுற்றில் குகேஷ் 8 வெற்றி, 2 டிரா மற்றும் ஒரு தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. அர்ஜூன் எரிகாசி வெள்ளிப் பதக்கமும், நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்கள் பிரிவில் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்மிக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

மாநில கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு!

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சிறுவர்களுக்கான (ஜூனியர்) தமிழ்நாடு சாம்பியன் ஷிப் கபடி போட்டிகள் மயிலாடுதுறையில் இம்மாதம் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி அந்தந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.