குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!
நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.
மகளிர்க்காக ’பிங்க்’ வண்ணப் பேருந்து!
திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, மகளிர்க்கு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மகளிர்க்கான இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இன்று தொடங்கி வைக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு; முதல்வர் பங்கேற்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் இன்று துவங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை என 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார். மாநாட்டுக் கொடியை கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி துவங்கி வைக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 77வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,50,547 ஆக அதிகரித்துள்ளது. 1,530 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் தமிழகம் முழுவதும் 10,598 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்!
சட்ட விரோதமாக கருமுட்டை விற்பனை செய்த பிரச்னையில், ஈரோடு சுதா மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை சீல் வைத்தது. உத்தரவுக்கு தடை ஆணை பெற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், சீல் வைத்த அரசு உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இந்நிலையில் சீல் வைக்கும் முயற்சியை கைவிடக்கோரி, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்தில், 250 தனியார் மருத்துவமனைகள், 800 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் : ’இந்திய சி’யை வீழ்த்திய ’இந்திய ஏ’ அணி!
44 செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் ஓபன் பிரிவில் இந்திய ‘சி’ அணியை இந்திய ‘ஏ’ அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் அஜர்பைஜானையும், இந்தியா சி அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வென்ற நிலையில் இந்தியா பி அணி தோற்றது.
காமன்வெல்த் : 5வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் 8-ம் நாள் முடிவில் இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்று 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய வீரர் தீபக் பூனியா, பஜ்ரங் பூனியா, இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் ஆகியோர் நேற்று தங்கப்பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!
வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை நடிகை மீது சினேகன் புகார்!
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான சினேகன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் தன்னுடைய அறக்கட்டளையின் பெயரில் போலி சமூக வலைதள பக்கங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6 ) முக்கிய பகுதிகளில் மின்தடை!