சர்வதேச விமான நிலையம்!
கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) திறந்து வைக்கிறார்.
பாரதியார் சிலை திறப்பு!
காசியில் சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இமாச்சல் முதல்வர் பதவியேற்பு!
இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்வீந்தர் சிங் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னி கோத்ரி பதவியேற்கிறார்.
பாஜக ஆர்ப்பாட்டம்!
விவசாயி ஜம்புலிங்கம் மரணத்திற்கு நீதி கேட்டு அரியலூரில் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழரசன் டிரைலர் வெளியீடு!
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது!
வானிலை நிலவரம்!
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால், தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும்.
உலக கோப்பை கால்பந்து போட்டி!
இன்று இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற உலக கோப்பை காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஸ்டோன்பென்ஞ் புதிய படம்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் புதிய படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 204-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.