அதானி – விசாரணை அறிக்கைகள் தாக்கல்!
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்தின் மீதான விசாரணை அறிக்கைகள் அனைத்தும் இன்று (நவம்பர் 8) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆ. ராசா தரப்பில் வாதம்!
சனாதன ஒழிப்பு குறித்து பேசியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று திமுக எம்.பி ஆ.ராசா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட உள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை!
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
11 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி காற்று மாசு – ஆலோசனைக் கூட்டம்!
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாயகரமான குறியீட்டிலேயே இருக்கும் சூழலில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் இணைந்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் சின்னம் உருவாகும்!
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலானது இன்று இயக்கப்படுகிறது.
இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதல்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 536வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டொமினிக் மார்ட்டினிடம் விசாரணை!
கேரள குண்டுவெடிப்பு கைது செய்யப்பட்டுள்ள டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேல் – ஹமாஸ் : தாக்குதல் நோக்கமும் அரசியல் வியூகமும்!
கிச்சன் கீர்த்தனா: சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்!
டிஜிட்டல் திண்ணை: மத்திய அமைச்சர் கமல்…திமுக வீசும் தொகுதித் தூண்டில்!