டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

இன்று விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு இன்றும்(நவம்பர் 13) தமிழ்நாட்டில் அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!

தீபாவளி விடுமுறை இன்று நிறைவு பெறுவதையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிற ஊர்களில் இருந்து, சென்னைக்கு மட்டும், 2,100 வழக்கமான பேருந்துகளும், 3,167 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சத்தீஸ்கரில் மோடி!

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தில் உள்ள முங்கேரி மற்றும் ஜம்குஹி பகுதிகளுக்கு செல்கிறார்.

போபாலில் ராகுல்காந்தி!

மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று போபால் செல்லும் ராகுல்காந்தி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கந்தசஷ்டி திருவிழா துவக்கம்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பி.சுசீலாவின் பிறந்த நாள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 25ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய ‘இசைக்குயில்’ பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 541ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று போட்டி கிடையாது!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்காக இன்றும் நாளையும் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கழிவு அகற்றம்!

சென்னை தெருக்களில் குவிந்த பட்டாசு கழிவுகளை அகற்ற இன்று சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேரட், வெள்ளரி மற்றும் ஹங் தயிர் ரோல்

நெதர்லாந்தை சுருட்டிய இந்திய அணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share