டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மலர் கண்காட்சி நிறைவு!

கொடைக்கானலில் மே 26 ஆம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியாக உள்ள ‘ரெஜினா’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

+2 பொதுத்‌தேர்வு விடைத்தாள் நகல்‌!

பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த + 2 மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோதங்கராஜை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புளியங்குடியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 374 வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும்,  டீசல் ரூ.94.24க்கும் விற்கப்படுகின்றன.

ஜூன் 2 வரை மழை!

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் செல்லும் ஐசிசி!

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர் அதிகாரிகள் இன்று பாகிஸ்தானுக்கு செல்கின்றனர்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டி!

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விடுமுறை அறிவிப்பு!

பிரமோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு திருநள்ளாறு நகர பகுதிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?

தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *