விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் இன்று (மே 29) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
அசாமின் முதல் வந்தே பாரத் ரயில்!
அசாமில் இருந்து முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று மதியம் 12 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்கா செல்கிறார் ராகுல்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்.
கலந்தாய்வு தொடங்குகிறது!
தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டி!
அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்த ஐபிஎல்2023 இறுதிப் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ரிசர்வ் டே முறைப்படி சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் குடித்து பலி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை அடுத்து தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
அக்னி முடிஞ்சாலும் வெயில் தொடரும்!
அக்னி நட்சத்திரம் இன்று முடியவுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 373வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்கப்படுகின்றன.
பேட்டில் கிரவுண்ட் கேம்!
இந்தியாவில் இன்று முதல் ’பேட்டில் கிரவுண்ட்’ விளையாட்டை விளையாடலாம் என்று கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீரன் 3வது சிங்கிள் ரிலீஸ்!
‘வீரன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘வீரன் திருவிழா’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?
பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை: மனோ தங்கராஜ்