டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா!

தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைக்கிறார்.

புதிய நாடாளுமன்றம் – முற்றுகை போராட்டம்!

இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கவுள்ள நிலையில், அதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பாலியல் வழக்கில் ஒருமாதகாலமாக நீதிகேட்டு வரும் மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

கருப்புக்கொடி ஏற்ற உத்தரவு!

சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்து இன்று வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா இன்று பதவியேற்கிறார்.

பெட்ரோல்  டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 372வது நாளாக இன்று விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகின்றன.

கவுண்ட்-டவுன் தொடங்கியது!

அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை ஏவப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான 27 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் இன்று காலை 7.21 மணிக்கு தொடங்குகிறது.

திருப்பூர் மருத்துவமனை திறப்பு விழா!

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று காலை 10 மணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார்.

யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வு!

2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) இன்று இந்தியா முழுவதும் நடக்கிறது.

விலையில்லா மதிய உணவு!

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளியோருக்கு இன்று விலையில்லா மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி: சென்னை – குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ரஜினியின் ஹேஷ்டேக்!

கிச்சன் கீர்த்தனா: பிரியாணிக்குப் பிறகு சோடா குடிப்பவரா நீங்கள்?