வேட்புமனு தாக்கல் செய்வார்கள்!
இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றே கடைசி நாள்! top 10 news Tamil today march 25 2024
சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மக்களவைத் தேர்தலில் அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கு படிவம் 12Dயை பூர்த்தி செய்து வழங்க இன்றுதான் கடைசி நாள்.
நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!
தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாங்குநேரியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது.
தரிசன டிக்கெட் இன்று கிடைக்கும்!
ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
100 ஆண்டுக்கு பிறகு சந்திர கிரகணம்!
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழப் போகிறது. இந்த நிகழ்வானது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ இருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்வு நிறைவு!
தமிழ்நாட்டில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
காஞ்சிபுரத்தில் உதயநிதி!
அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இலவச நீட் பயிற்சி! top 10 news Tamil today march 25 2024
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
வெற்றியை தொடங்குமா ஆர்.சி.பி?
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கொத்தமல்லி கார பால்ஸ்
GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!