தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் இன்று (மார்ச் 22) மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தைதொடங்குகிறார்.
அமைச்சராகிறார் பொன்முடி!
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல்!
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே – ஆர்சிபி!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
புதுச்சேரி கவர்னராக பதவியேற்பு!
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று இரவு ராஜ்நிவாஸில் பதவியேற்கிறார்.
கெஜ்ரிவால் கைது – உச்சநீதிமன்றம் விசாரணை!
கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் 2ஜி வழக்கு!
2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை ஏற்பது பற்றி இன்று டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.
மழைக்கு வாய்ப்பு!
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
ஐபிஎல் போட்டி தொடக்கத்தை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நார்த்தங்காய் ஊறுகாய்
ஆரம்பமே இப்படியா? – அப்டேட் குமாரு