இன்று வேட்புமனு தாக்கல்!
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி மற்றும் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது!
தமிழ்நாட்டில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று காலை 10 மணியளவில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை!
தங்களது கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகிழ்ச்சி தினம்!
உலகம் முழுவதும் இன்று மகிழ்ச்சி தினத்தை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
இளையராஜாவின் பயோபிக்
இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மதியம் 12.30 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார்.
திருப்பதி தெப்போற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
லேசான மழைக்கு வாய்ப்பு!
இன்று முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மாறும் வேட்பாளர்கள் யார்? ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!