மத்திய அமைச்சரவை கூட்டம்!
ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 5) காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணி ஆலோசனை!
ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஸ்டாலின் டெல்லி பயணம்!
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
உலக சுற்றுச்சூழல் தினம்!
ஒவ்வொரு ஆண்டும், இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் திருப்பத் தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தியா -அயர்லாந்து மோதல்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூயார்க் நகரத்தில் இந்திய அணி இன்று இரவு 8 மணிக்கு அயர்லாந்துடன் தனது முதல் போட்டியில் சந்திக்கிறது.
இன்றே கடைசி நாள்!
அக்னிவீர் இசைக்கலைஞர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தகுதியுடைய இளைஞர்கள் இத்தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சிக்கு எதிர்ப்பு!
புதுக்கோட்டையை மாநகராட்சியாக்கும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி 11 ஊராட்சி மக்கள் மற்றும் நகராட்சி மக்களும் பங்கேற்கும் வகையில் 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 81வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது
நடிகை ரம்பா பிறந்தநாள்!
90ஸ் களின் கனவு கன்னியாக முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று!
T20 World Cup 2024: வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவு கோடியா?