டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மன்சுக் மாண்டவியா ஒடிசா விரைகிறார்!

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று (ஜூன் 4) ஒடிசா விரைகிறார்.

தமிழக பயணிகள் வந்தனர்!

விபத்து ஏற்பட்ட ஒடிசாவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சிறப்பு ரெயில் 137 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

விழிப்புணர்வு கூட்டம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது.

தென்மேற்கு பருவ மழை!

இன்று தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7ஆம் தேதி திறக்கப்படுவதையொட்டி இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பிடெக் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஊட்டியில் ஆளுநர்!

ஊட்டி ராஜ்பவனில் நாளை துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அங்கு ஓய்வெடுக்கிறார்.

குமரி சங்கமம் ஒத்திவைப்பு!

கன்னியாகுமரியில் இன்று பாஜக சார்பில் நடைபெறவிருந்த ‘குமரி சங்கமம்’ பொதுக் கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி பிறந்த தினம்!

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என்று இசையால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த பாடகர் எஸ்.பி.பி பிறந்த தினம் இன்று!

2வது ஒருநாள் போட்டி!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பந்தோட்டா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இணையத்தில் வைரலாகும் தோனி ரசிகரின் திருமண அழைப்பிதழ்!

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments are closed.