டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பலி எண்ணிக்கை உயர்வு!

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா ரத்து!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக சென்னை புளியந்தோப்பில் இன்று (ஜூன் 3) மாலை நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்

ரயில் விபத்து  நடந்தேறியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இன்று ஒடிசா விரைகின்றனர்.

வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இன்று நடக்க இருந்த கோவா- மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் ஒரு நாள் துக்கம்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ள நிலையில் ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

டிஎன்பிஎல் டிக்கெட் விற்பனை!

வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் 7-வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்க உள்ளது.

சென்னையில் மலர் கண்காட்சி!

சென்னை செம்மொழி பூங்காவில் இன்று முதல் முதல் 5ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா பேரணி!

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் மழைநீர் வடிகால் பணியின் காரணத்தால் இன்று முதல் 3 நாட்களுக்கு எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 378ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகின்றது.

கோரமண்டல் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!

ஒற்றை வரியில் மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த கமல்ஹாசன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *