கலைஞர் நூற்றாண்டு இலச்சினை!
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(ஜூன் 2) நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் இலச்சினையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
தாமிரபரணி நதி ஜெயந்தி பெருவிழா
தாமிரபரணியின் புனிதம் மற்றும் அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ’தாமிரபரணி நதியின் ஜெயந்தி பெருவிழா’ திருநெல்வேலி, தூத்துக்குடியில் இன்று மாலை நடைபெறுகிறது.
ஒரே நாளில் 4 திரைப்படங்கள் ரிலீஸ்!
இன்று திரையரங்குகளில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’, ‘வீரன்’ , ’உன்னால் என்னால்’, ’துரிதம்’ உள்ளிட்ட 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன.
இலங்கை அணியில் பதிரானா அறிமுகம்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியில் கலக்கிய மதீஷா பதிரானா இலங்கை அணியில் அறிமுகமாகிறார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 377 ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகின்றன.
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஓமனின் சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பையின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
வைகாசி விசாக திருவிழா!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.
11 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இளையராஜா, மணி ரத்னம் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் உச்ச பிரபலங்களாக கருதப்படும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணி ரத்னம் ஆகியோரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அடுத்த படம்… வாக்குறுதி கொடுத்துள்ளேன்: உதயநிதி ஸ்டாலின்
கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு புளிப்பச்சடி