டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முல்லை பெரியாறில் நீர் திறப்பு!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக இன்று (ஜூன் 1) நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார்.

இனி வழக்கம்போல் போகலாம்!

கோடை சீசன் முடிந்ததால் உதகைக்கு இன்று காலை முதல் வழக்கம்போல் இருவழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆறு மாவட்டங்களுக்கு மழை!

ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிக் போல்ட் சேல்!

இந்தியாவின் முன்னணி ஃபேஷன் ஆன்லைன் நிறுவனமான ஆஜியோ (AJIO) நிறுவனம் ‘பிக் போல்ட் சேல்’ நிகழ்வை இன்று தொடங்கவுள்ளது.

மீன்பிடிக்க செல்கிறோம்!

தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில் விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளதாக சென்னை மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சதுரகிரிக்கு அனுமதி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிக்கு வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 4ஆம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மாமன்னன் பட இசை வெளியீட்டு விழா!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள ’மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

பொம்மை படத்தின் அப்டேட்!

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 376வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனையாகின்றன.

கேரளாவில் வசூல் சாதனை உறுதி: ’லியோ’ பட உரிமையை கைப்பற்றிய ஃபெயோக்?

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பொரியல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *